முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஓமனை வீழ்த்தியது வங்கதேசம்

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மஸ்கட் : சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தகுதிச்சுற்று... 

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம்-ஓமன் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. அல் அமீரட் நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

நைம் அரைசதம்...

லிட்டன் தாஸ் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய போதிலும், நைம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 50 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சகீப் அல் ஹசன் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மஹ்முதுல்லா 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

127 ரன்கள்... 

பின்னர், 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணியின் தொடக்க வீரர்களாக அகிப் மற்றும் ஜத்திந்தர் சிங் களமிறங்கினர். அகிப் 6 ரன்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஜத்திந்தர் சிங் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஓமன் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றிபெற்றது.

சகீப் அல் ஹசன்... 

வங்கதேசம் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிஷிர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்காளதேச அணியின் சகீப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து