முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலிக்கு மெழுகு சிலை

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய கிளையைத் தொடங்கியது. இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விராட் கோலியின் மெழுகு சிலையை மேடம் டுசாட்ஸ் திறந்துள்ளது. 

கால்பந்து வீரர் மெஸ்ஸி, நடிகர்கள் டாம் க்ரூஸ், ஜாக்கி சான் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகளும் துபாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது, விராட் கோலிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு மெழுகு சிலையை திறந்தது குறிப்பிடத்தக்கது.

__________________

ஆஸ்திரேலிய வீரர் திடீர் ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். டிசம்பர் மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வர இருக்கும்நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓய்வு பெறுவதாக பட்டின்ஸன் அறிவித்துள்ளார். அதேநேரம் உள்நாட்டுப் போட்டிகளிலும் விக்டோரியா அணிக்காகவும்தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

31 வயதாகும் பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழத்தி்யுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு டேவிட் வார்னர், மிட்ஷெல் ஸ்டார்க் ஆகியோருடன் சேர்ந்து பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகினார். கடைசியாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட்டின்ஸன் ஆஸிஅணியில் விளையாடினார்.அதன்பின் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம்,முழங்காலில் ஏற்பட்ட காயம் ஆகியவற்றால் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்தார்.

______________

மைக்கேல் ஸ்லாட்டர் கைது

புகழ்பெற்ற டெஸ்ட் வீரரான ஸ்லாட்டர், கொரோனா பரவல் அதிகமாக இருந்தநேரத்தில் இந்தியாவிலிருந்து எந்த ஆஸ்திரேலியர்களும் வருவதற்கு தடை விதித்து பிரதமர் மோரிஸன் உத்தரவிட்டார். பிரதமர் மோரிஸனின் உத்தரவை கடுமையாக விமர்சித்த ஸ்லாட்டர் பிரதமர் உங்கள் கரங்களில் ரத்தம்படிந்துள்ளது என காட்டமாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

51 வயதாகும் ஸ்லாட்டர் மீது குடும்ப வன்முறை சட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, மான்லி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 12-ம் தேதி குடும்ப வன்முறையில் ஸ்லாட்டர் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மைக்கேல் ஸ்லாட்டர் பல்வேறு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து