முக்கிய செய்திகள்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி. சிந்து

pv-sindhu

Source: provided

ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தாய்லாந்து...

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் விளையாடினர். ஒரு மணிநேரம் மற்றும் 7 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், சிந்து 21.16, 12-21, 21-15 என்ற புள்ளி கணக்கில் பூசணனை வீழ்த்தினார்.

அதிரடியாக...

முதல் செட்டை கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டில் தோல்வி கண்டார்.  2வது செட்டை பூசணன் வெற்றி பெற்ற சூழலில், போட்டி 3வது செட்டை நோக்கி சென்றது.  இதில், சிந்து அதிரடியாக விளையாடி போட்டியை தன்வசப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து