முக்கிய செய்திகள்

பயங்கரவாத நிதியுதவி: சாம்பல் பட்டியலில் துருக்கி சேர்ப்பு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      உலகம்
Turkey 2021 10 22

Source: provided

பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதால் பாகிஸ்தான் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் உள்ளதாக பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத  நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பாகிஸ்தானை  தொடர்ந்து சாம்பல் பட்டியலில் தக்கவைத்து உள்ளது. மேலும்  அதன் நட்பு நாடான துருக்கியையும் தற்போது  சாம்பல் பட்டியலில் சேர்த்து உள்ளது. இது பாகிஸ்தானுக்கு இரட்டை அடியாக உள்ளது.  இதற்கு முன்பு கருப்பு பட்டியலில் நுழைவதைத் தவிர்க்க துருக்கி ஆதரவை பாகிஸ்தான்  பெற்று இருந்தது.மேலும்   ஜோர்டான் மற்றும் மாலி ஆகியவையும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இதுகுறித்து  நிருபர்களுக்கு பேட்டி அளித்த  பயங்கரவாத  நிதி நடவடிக்கை பணிக்குழு  தலைவர் மார்கஸ் பிளேயர் கூறியதாவது., லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும்  தலீபான் போன்ற அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தானைப் போல ஜோர்டான், மாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் சாம்பல் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க இந்திய அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாக கூறப்படுவதை எப்ஏடிஎப் மறுத்தது. தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுவதை பாகிஸ்தான்  நிரூபிக்க வேண்டும் என கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து