முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 22 வயது பெண் போட்டியின்றி தேர்வு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை, : திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் புதிதாக  பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு  கட்டங்களாக நடைபெற்றது. 

இதற்கான வாக்கு  எண்ணிக்கை கடந்த 12ம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் வெற்றிப் பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம  ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த  ஊராட்சிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன் பதவியேற்றனர்.

இவர்கள் நேற்று  நடந்த தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களித்தனர். இதில் திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.கவை சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மானூர் ஒன்றியத்தின் கீழ் 41 கிராம ஊராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து