முக்கிய செய்திகள்

அரியானா: விபத்தில் 8 பேர் பலி

Haryana 2021 10 22

Source: provided

சஜ்ஜார் : அரியானாவில் நடந்த  சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். 

அரியானாவின் சஜ்ஜார் மாவட்டம் பஹதூர்கரில் உள்ள பத்லி பகுதியில் கேஎம்பி எக்ஸ்பிரஸ்வேயில்  கார் ஒன்று நேற்று காலை சென்று கொண்டு இருந்தது. அப்போது காருக்கு பின்னால் வந்த வாகனம் கார் மீது மோதியது

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி ஒன்றின் மீது மோதி சிதறியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து