முக்கிய செய்திகள்

மகனுக்கு கட்சியில் பதவி: தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டதாக வைகோ விளக்கம்

Vaigo 2021 10 22

Source: provided

சென்னை : எனது மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு என்பது உண்மையல்ல என வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தனது மகனுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது குறித்து மதுரையில் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எனது மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு என்பது உண்மையல்ல. ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, பொறுப்பு வழங்கப்பட்டது. நியமனம் செய்யும் அதிகாரம் தனக்கு உள்ளபோது வாக்கெடுப்பு நடத்தி நியமித்துள்ளேன். தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து