முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை: பிரதமர் மோடிக்கு நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நிலவுகிறது. இந்திய பரதநாட்டியக் கலைஞர், இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்த பிரபல நடிகை, நடன நிகழ்ச்சிகளில் நடுவர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சுதா சந்திரன்

தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் "அவமானப்படுத்தப்படுவதை" தவிர்க்கலாம் என்று நடிகை கூறி உள்ளார். செயற்கை மூட்டுகளைப் பயன்படுத்தும் சுதா, ஒவ்வொரு முறையும் "வலிக்கிறது" என்று கூறி "கிரில்ஸ்" பாதுகாப்பு மூலம் தனது துன்பத்தை பகிர்ந்து உள்ளார். அவர் தனது வீடியோவில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள்""நான் சுதா சந்திரன், ஒரு நடிகர் மற்றும் நடனக் கலைஞர், நான் ஒரு செயற்கை மூட்டுடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி, என் நாட்டை பெருமைப்படுத்தினேன். . ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில்முறை பயணம்  செல்லும்போது,, நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை  மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள்  விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? 

நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு  ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள். விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது .... எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன் .... உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.  என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து