முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு வாய்ப்பு: பிரெட் லீ நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஐ.சி.சி. இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியதாவது., 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் உள்ள நிலையில் கோப்பையை வெல்வது எளிதானது அல்ல. 

இந்த ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் நிறைந்துள்ளனர். இதில் டேவிட் வார்னர் முக்கிய வீரராக இருப்பார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரது நம்பிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் அவர் முக்கியமான தருணத்தில் ஜொலிக்கக் கூடியவர். உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பில் இந்தியாவின் லோகேஷ் ராகுலும், அதிக விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

பாக்.கிற்கு ராகுல்தான்  அச்சுறுத்தல்: ஹெய்டன்

உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. உலக கோப்பை தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் இதுவரை வென்ற வரலாறு கிடையாது. ஆனால் இந்த முறை அதனை மாற்ற பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங்  ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் அளித்த பேட்டி: இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.

 

அவரை விரைவாக வெளியேற்றி விட்டால் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம். கே.எல்.ராகுலின் ஆட்டத்தை அவரின் ஆரம்பக் காலக்கட்டம் முதலே நான் பார்த்து வருகிறேன். அவரின் அதிரடி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இதேபோல ரிஷப் பன்ட் போன்ற ஆக்ரோஷ பேட்டிங்கை இயற்கையாகவே கொண்ட வீரரையும் நான் நன்கு அறிவேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார். அவரின் நோக்கமும் அதுதான். இவை அனைத்தையும் விட இந்திய அணியின் ஆலோகராக டோனி இருக்கிறார். அவர் ஆலோசகராக செயல்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து