முக்கிய செய்திகள்

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான பாக். அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      விளையாட்டு
Pakistan-India 2021 10 23

Source: provided

துபாய் : கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எதிர்கொள்கிறது...

ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. 

அணி அறிவிப்பு...

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு; - பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ்,  ஹைடர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து