முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ்

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன்தாஸ்'.  'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

கிருபாகரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்தைத் தொடர்ந்து இறுதிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து