முக்கிய செய்திகள்

100 கோடி தடுப்பூசி டோஸை கடந்த பிறகு நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது : மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

MODI 2021 10 24

Source: provided

புதுடெல்லி : 100 கோடி தடுப்பூசி டோஸை கடந்த பிறகு நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியான வானொலி மூலம் பேசுகையில்; தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பூசி போடுவதில் இந்தியா பெற்றுள்ள வெற்றியால் நம் நாட்டின் திறன் உலகத்துக்கு தெரியவந்துள்ளது.

பகவான் பீர்சா முண்டா பிறந்தநாளை அடுத்த மாதம் இந்தியா கொண்டாடவிருக்கிறது. நாட்டின் சுற்றுசூழலை காக்கவும் அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுத் தந்துள்ளார் பீர்சா முண்டா. 

இன்றைய மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றும் வகையில் டிரோன் கொள்கையை வகுத்துள்ளது மத்திய அரசு. பொருட்களை அனுப்ப டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது இந்தியா. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் போது கண்காணிப்பு பணியை மேற்கொள்ள டிரோன்களை காவல்துறை பயன்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசிகளை தேவையான இடங்களுக்கு அனுப்பவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டிரோன் கொள்கையை அரசு அறிவித்த பிறகு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அத்துறையில் முதலீடு செய்துள்ளன. முப்படைகளும் ரூ.500 கோடிக்கு டிரோன்கள் வழங்க, இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளன எனவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து