முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கட்டடத்தின் உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வருகிற 1-ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் போதிய இருக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கல்வி கட்டணம் தொடர்பான பட்டியல் தகவல் பலகையில் வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து