முக்கிய செய்திகள்

டி-20 உலகக்கோப்பை: இலங்கை அபார வெற்றி

bangaladesh

Source: provided

சார்ஜா: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். 

இதில் லிட்டன் தாஸ் 16 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 10 ரன்களில் போல்ட் ஆனார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தைக் கடந்த முகமது நைம், 52 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய முஸ்தாஃபிகுர் ரஹீம் சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய அவர் 37 பந்துகளில்(5 பவுண்டரி, 2 சிக்சர்) 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் கருணாரத்னே, ஃபெர்னாண்டோ மற்றும் லாஹிரு குமாரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்  குசால் பெராரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர்  களமிறங்கிய  அசலங்கா  நிசாங்கா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. அதன் பின் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்ந்தது. பின்களத்தில் இறங்கிய ராஜபக்சா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து