முக்கிய செய்திகள்

உ.பி.யில் காசிப்பூர் உள்ளிட்ட இடங்களில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர்

MODI 2021 10 25

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் காசிப்பூர், மிர்சாபூர் உள்ளிட்ட இடங்களில் 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 

பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று உத்தரபிரதேசம் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புத்தர் சிலை கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்பு சித்தார்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சித்தார்த்நகர், எடாஹ், ஹர்டோய், பிரதாப்கர், பதேபூர், டியோரியா, காசிப்பூர், மிர்சாபூர், ஜாவ்ன்பூர் ஆகிய 9 இடங்களில் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்து பிரதமர் மோடி பேசியதாவது, புத்தர் பல வருடங்களாக வாழ்ந்த நிலத்தில் இருந்து 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஆரோக்கியமான இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரும் வெற்றிப்படி ஆகும். இங்குள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 9 மருத்துவ கல்லூரிகளின் மூலம்  கூடுதலாக 2,500 படுக்கைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், புதிதாக 5,000க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் துணை-மருத்துவ பணியாளர்கள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் பூர்வாஞ்சல் பகுதி வட இந்தியாவின் மருத்துவ மையமாக திகழும். கிழக்கு உத்தரபிரதேச இளைஞர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவு இப்போது நனவாகியுள்ளது’’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து