முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கைப் பேரழிவுகளால் இந்தியாவுக்கு 2020-ல் மட்டும் ரூ.65.33 லட்சம் கோடி இழப்பு: உலக வானிலை அமைப்பு தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ரூ.65.33 லட்சம் கோடி (8,700 கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை மையம் (டபிள்யு எம்ஓ) கணித்து அறிவித்துள்ளது.

ஆசியாவில் உள்ள காலநிலையின் சூழல் என்ற தலைப்பில் உலக வானிலை அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. சார்பில் காலநிலை தொடர்பான மாற்றம் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம், கடும் மழை, வறட்சி ஆகியவற்றால் சீனா, இந்தியா, ஜப்பான் நாடுகள் அதிகமான சேதத்தைச் சந்தித்துள்ளன. இதில் சீனா அதிகபட்சமாக இயற்கைப் பேரழிவுகள் மூலம் 23,800 கோடி டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. அடுத்ததாக இந்தியா கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகள் மூலம் 8,700 கோடி (ரூ.65.33 லட்சம் கோடி) டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் 8,300 கோடி டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பொருளாதார ரீதியான சேத விவரங்களை ஆசியாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ற்றும் சமூக ஆணையம் (ஈஎஸ்சிஏபி) தயாரித்து வழங்கியுள்ளது.

 

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆசியாவில் இந்தியா, வங்கதேசத்தைத் தாக்கிய அம்பன் புயல் வலிமையான புயலாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 24 லட்சம் மக்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்தனர். 25 லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இடம் பெயர்ந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து