முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய தடுப்பூசி

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

சீனாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 223 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்நிலையில் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. முன்னதாக சினோவாக், சினோபார்ம் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு செலுத்த சீன அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து சீனாவின் பல்வேறு மாகாணங்களில் 3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நைஜீரியா: துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் உள்ள மஷீகு நகரின் மசகுஹா கிராமத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு தளமான மசூதி ஒன்று உள்ளது. 

அந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்குள் புகுந்த துப்பாக்கியேந்த நபர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து செ

பிரேசில் அதிபரின்  சர்ச்சை பேச்சு நீக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் நோய் தாக்கும் என்று பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனோரா சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி  குறித்து பொய்யான தகவலை பரப்பியதைத்தொடர்ந்து, அது தொடர்பான வீடியோவை பேஸ் புக், யூடியூப் நிறுவனங்கள் நீக்கி உள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி குறித்த தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததால் பதிவு நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் தேவையற்ற வதந்திகளை பரப்பும் பதிவுகளை பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை நீக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய் தாக்கும் என்று பொய்யான தகவலை பேஸ்புக் மூலம் பரப்பிய பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனோராவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

சூடான் பிரதமர்  கைது: அவசர நிலை பிரகடணம்

சூடான் நாட்டில் தற்போது வரை இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பிரதமராக இருக்கிறார் அப்தல்லா ஹாம்டாக். முன்னதாக நீண்ட காலமாகவே ஒமர் அல் பஷீர் சூடான் நாட்டின் அதிபராக இருந்தார். 1989 முதல் 2019 வரை அவர் அதிபராக இருந்தார். அவர் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ள ராணுவத் துணையுடன் மக்கள் அதிபரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அமைந்த இடைக்கால அரசின் பிரதமரானார் அப்தல்லா ஹாம்டாக்.

இந்நிலையில், அண்மைக்காலமாகவே இடைக்கால ஆட்சிக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு வந்தனர். இம்மாதத்தில் அப்தல்லா ஹாம்டாக்கை ராணுவத்தின வீட்டுச் சிறையில் வைத்தனர். இப்போது அவர் ர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ராணுவத் தளபதி.

சீனா, ரஷ்யாவில் மீண்டும்  அதிகரிக்கும் கொரோனா 

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்-கின் சாங்பீங் மாவட்டத்தில் உள்ள ஹாங்ஃபுயுவான்அதிக ஆபத்துள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளது. அங்கு 23 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.  ரஷ்யாவில் ஒரே நாளில் 35,660 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 1,072 பேர் உயிரிழந்தனர். அங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மாஸ்கோவில் மட்டும் வரும் 28-ஆம் தேதி முதலே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து