முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி மகோ

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார். ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.

ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அத்தொகையைப் பெற மகோ மறுத்துள்ளார். அதே போல அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படவில்லை. இந்த இரண்டையும் மறுத்த முதல் அரச குடும்பத்துப் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மகோ.

இளவரசி மகோ நேற்று ஜப்பானிய நேரப்படி காலை 10 மணியளவில் டோக்யோவில் உள்ள தன் வீட்டிலிருந்து, தன்பெற்ரோருக்கு பல முறை தலைகுனிந்து வணக்கம் கூறி, தன் திருமணத்தை பதிவு செய்யப் புறப்பட்டார். தன் இளைய சகோதரியையும் கட்டியணைத்து விடைபெற்றதாக க்யோடோ முகமையில் செய்தி வெளியானது. கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்னைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது.

 

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து