முக்கிய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கி சர்க்கரை-10 கி அரிசி இலவசம்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Puducherry 2021 09 26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் இது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடித விவரம் வருமாறு.,

புதுச்சேரி முதல்வர் தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தர முடிவு எடுத்துள்ளார். அதனால் நியாயவிலைக் கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும். கடிதத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 4-ம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து