முக்கிய செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் ம.பி.யில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Corona 2021 07 21

Source: provided

போபால் : மத்தியப் பிரதேசத்தில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 பேர் டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய ஏஒய்.4 வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 6 பேருக்கும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் இந்தூர் நகரையும் மற்ற மூவர் இந்தூர் மாவட்டம் மோவ் பகுதியையும் சேர்ந்தவர்கள்- அனைவரும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு குறித்து எந்த அறிகுறியும் இல்லாத 41 வயது முதல் 80 வயது கொண்ட இந்த ஆறு பேரின் மாதிரிகள் கடந்த செப்டம்பர் மாதம் புது டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகின.

இவர்கள் ஆறு பேருக்கும் டெல்டா வகை வைரஸின் உருமாறிய தொற்றான ஏஒய்.4 பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்தூர் மாவட்ட சுகாதாரத் துறை தலைவர் கூறியுள்ளார். அவர்களுடன் தொடர்பிலிருந்த 50 பேரை கண்டறிந்துள்ளோம். இவர்கள் ஆறு பேருமே இதர மாநிலங்கள், நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். ஆனால் எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. நாட்டிலேயே முதல் முறையாக ஏஒய்.4 ரக வைரஸ் மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து