முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேர் பரிந்துரை

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

விளையாட்டு துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயரிய விருது...

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

நீரஜ் சோப்ரா...

இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. அவ்வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வன்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, கால்பந்து வீரர் சுனில்  சேத்ரி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாரா-தடகளப் பிரிவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவனி லெகாரா உள்ளிட்ட 5 பேர் என மொத்தம் 11 பேரின் பெயர்கள்,  2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

அர்ஜூனா விருது...

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறுபவர்கள்:

  • 1) நீரஜ் சோப்ரா (தடகளம்),
  • 2) ரவி தஹியா (மல்யுத்தம்),
  • 3) பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி),
  • 4) லவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை),
  • 5) சுனில் சேத்ரி (கால்பந்து),
  • 6) மிதாலி ராஜ் (கிரிக்கெட்),
  • 7) பிரமோத் பகத் (பேட்மிண்டன்),
  • 8) சுமித் ஆன்டில் (தடகளம்),
  • 9) அவனி லேகாரா (ஷூட்டிங்),
  • 10) கிருஷ்ணா நாகர் (பேட்மிண்டன்),
  • 11) மணீஷ் நர்வால் (ஷூட்டிங்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து