முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நிலை தேறி வருகிறது: நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் : தனியார் மருத்துவமனை அறிக்கை

வெள்ளிக்கிழமை, 29 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்று சென்னை காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குதான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைச்சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் இருந்த அடைப்பு நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  சிறப்பு மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். சுதாகர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து