முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறில் 142 அடி நீரை தேக்க வலியுறுத்தி மதுரையில் விரைவில் போராட்டம்: : செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

மதுரை : முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் மதுரையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 139 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டாம் என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதன் அடிப்படையில் நாங்கள் திறந்தோம் என கேரள அரசு தெரிவிக்கிறது. இதை அ.தி.மு.க. உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

முல்லை பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் ஆட்சிக்கு வந்தபின் 142 அடியாக உயர்த்திக் காட்டியவரும் அவரே. மேலும், இருமுறை 142 அடி தண்ணீரைத் தேக்கி வைத்து இருக்கிறோம். தற்போதைய தி.மு.க. அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துபேசி கேரள, தமிழக அரசுகளைக் கண்டித்து மதுரையில் விரைவில் போராட்டம் நடத்துவோம்.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் நிதிகூட எங்களுக்கு ஒதுக்கவில்லை. தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய நிதி ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து