முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகும் வரை போராட தயார் என கூறி விட்டு ஆப்கனிலிருந்து தப்பியோடி விட்டார் கனி: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தன்னிடம் தலிபான்களுக்கு எதிராக சாகும்வரை போராடத் தயார் என்று கூறியதாகவும் ஆனால் அடுத்த நாளே அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

நாங்கள் ஆப்கன் அதிபர் கனியுடன் நட்புறவு பேணி வந்தோம். தலிபான்களை கட்டுப்படுத்த ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினோம். நாங்கள் கனியை ஊக்கப்படுத்தினோம்.  ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி என்னிடம் தலிபான்களுக்கு எதிராக சாகும்வரை போராடத் தயார் என்று கூறினார். ஆனால் அடுத்த நாளே அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடி விட்டார். 

கனியுடன் பல மாதங்கள் தொடர்பில் இருந்தேன். அதிகார மாற்றத்திற்கான திட்டத்துடன் உடன்படுமாறு கனிக்கு அழுத்தம் கொடுத்தோம். அவர் அதைச் செய்யத் தயாராக இருப்பதாக என்னிடம் தொலைபேசியில் கூறினார். ஆனால் அதற்குள் தலிபான்கள் முந்திக் கொண்டார்கள். அவர் மரணம் வரை போராடத் தயாராக இருந்ததாக கூறினார். அடுத்த நாளே, அவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். இது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து