முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது ஏர் கனடா நி்றுவனம்

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 800 ஊழியர்களை ஏர்கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விமானத்தில் பயணிகள் பயணிக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணிக்கு வரும் விமான ஊழியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என பல விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த வகையில், கனடா நாட்டின் ஏர்கனடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 800-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

 

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் 800-க்கும் மேற்பட்டோரை ஏர் கனடா நிறுவனம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திய பின்னரே பணியில் சேர்க்கப்படுவார்கள் என ஏர்கனடா அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!