முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 10,929 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 10,929 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளா தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 6,580 பேர் அடங்குவர். அதாவது புதிய பாதிப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் கேரளாவில் உள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 683 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,16,101 பேர் அடங்குவர். பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,01,835 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 314 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 392 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,60,265 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,362 பேர் அடங்குவர்.

கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 12,509 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 37 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,46,950 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 255 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும். நாடு முழுவதும் மக்களுக்கு 20,75,942 தடுப்பூசிகள் போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை இதுவரை 107 கோடியே 92 லட்சத்தை கடந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 8,10,783 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 61.39 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து