முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீதிமன்றம் தெரிவித்ததாவது: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

இதனையடுத்து, தற்போது 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து