முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தேசிய செயற்கு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அடுத்தாண்டில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு குறித்து ஆலோசிப்பது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. 

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தொடங்கிய இந்த கூட்டம் மாலை வரை நடைபெற்றது. கொரோனா விதிகளைப் பின்பற்றி தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்ததால், பா.ஜ.க. முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வந்து கலந்து கொண்டனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள், மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

கூட்டம் துவங்கியதும், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை பாராட்டும் வகையில், பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலையை பா.ஜ.க. தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும்  நிர்வாகிகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து கூட்டத்தில் நட்டா பேசுகையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.  புதிய வரலாற்றை எழுதியுள்ளது. உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம் என மேற்கு வங்க மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசிய பின்னர், அரசியல் தீர்மானத்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்மொழிந்தார். அதை, தமிழக பா.ஜ.க.  தலைவர் அண்ணாமலை வழிமொழிந்தார். இந்த தீர்மானம் குறித்து, ஜி.கிஷன் ரெட்டி, பீரன் சிங், அனுராக் தாக்கூர், பிரமோத் சாவந்த், அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் புஷ்கர் தமி ஆகியோர் பேசினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து