முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ10, டீசல் ரூ. 5 வாட் வரி குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லூதியானா : காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடு முழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. 

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து கடந்த 3-ம் தேதி மத்திய அரசு அறிவித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.  கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ. 38.78 உயர்த்தியது, தற்போது அதில் ரூ. 5 குறைத்திருக்கிறது. டீசலில் லிட்டருக்கு ரூ. 29.03 உயர்த்தி விட்டு ரூ.10 குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்ததையடுத்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்தபின்பும் மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்காதது குறித்து பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10 , டீசல் ரூ.5 வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.  இதுவரை பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அசாம், சிக்கிம், பிஹார், கோவா, தாத்ரா நகர் ஹாவேலி, டாமன் டையு, சண்டிகர், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, லடாக், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசங்களில் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து