முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத் தலைவர்கள் தரவரிசை பட்டியல்: இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பின்னுக்குத்தள்ளி இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

மெக்சிகோ, இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். உலக தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதற்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்தப் பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் (66 சதவீதம்), இத்தாலி பிரதமர் மரியோ டிராகி (58 சதவீதம்), ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் (54 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் (47 சதவீதம்), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (44 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (43 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (40 சதவீதம்) இடம்பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து