முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு: கேப்டன் அம்ரீந்தர்சிங்கிற்கு பின்னடைவு

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : பஞ்சாபின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிட தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது. இது, காங்கிரஸிலிருந்து வெளியேறி புதியக் கட்சி துவக்கிய கேப்டன் அம்ரீந்தர்சிங்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இச்சூழலில் அக்கட்சியினுள் உருவான உட்பூசலால், முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர்சிங் ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தவர், ’பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ எனும் பெயரில் புதிய கட்சியை துவக்குவதாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் பஞ்சாபின் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது அவரது திட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாபின் 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில பா.ஜ.க தலைவர் அஸ்வினி சர்மா அறிவித்துள்ளார். தற்போதைக்கு எவருடனும் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் கட்சி இல்லை எனவும் அஸ்வின் கருத்து கூறியுள்ளார். இதற்கு முன் பஞ்சாபின் முக்கிய கட்சியான சிரோமணி அகாலி தளத்துடன் பா.ஜ.கவின் கூட்டணி இருந்தது.

பா.ஜ.க ஆதரவுடன் அக்கட்சியின் பழமையான கூட்டணியான அகாலில் தளத்தின் முதல்வர் ஆட்சியில் இருந்தார். மத்தியிலும் தொடர்ந்த இக்கூட்டணி, வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இவை வாபஸ் பெறாததை காரணம் காட்டி பா.ஜ.கவின் கூட்டணியையும் முறித்துக் கொண்டது அகாலி தளம். இதனால், பா.ஜ.க பஞ்சாபில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பா.ஜ.கவின் இந்த அறிவிப்பு, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவிருந்த கேப்டன் அம்ரீந்தருக்கு பின்னடைவு எனக் கருதப்படுகிறது. ஏனெனில், தனது தனிப்பட்டக் கொள்கைகள் காரணமாக அகாலி தளம் மற்றும் முக்கிய எதிர்கட்சியான ஆம் ஆத்மி ஆகியோருடன் அம்ரீந்தர் கூட்டணி வைக்க முடியாத நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து