முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு: நாசா

புதன்கிழமை, 10 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி முதன்முதலில் மனிதனை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல முறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.

டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 2024-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்குவதாக ஒப்பந்ததில் முடிவு செய்தனர்.

விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளன. எனவே இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து