முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விவகாரம்: நாம் தமிழர் கட்சி 14-ந் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

புதன்கிழமை, 10 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலை தடுக்கத்தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14-ந்தேதி தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறம் என சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்கள் அடாவடிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்கத்தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து