முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3 மாதங்களில் 600 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது : தலிபான்கள் தகவல்

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் கடந்த 3 மாதங்களில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், ஆகஸ்ட் 30-ம் தேதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மசூதிகளில் தாக்குதல், காபூல் மருத்துவமனையில் தாக்குதல் என ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஐ.எஸ். கோராசன் தீவிரவாதிகள் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாகி விடக் கூடாது என்பதுதான் தலிபான்களுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  ஐ.எஸ்.-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து