முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அனுமதி

வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பக்ரைன்" கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பக்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு சில நாடுகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், பக்ரைன் நாட்டிலும் கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.  இதையடுத்து, கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பக்ரைன் அரசு அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதால் விரைவில் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து