முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிமோனியா தடுப்பூசியில் முன்னேற்றம்: இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலை. பாராட்டு

சனிக்கிழமை, 13 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided


வாஷிங்டன் : கொரோனா பெருந்தொற்று சவாலை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ்  பல்கலைக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக நிமோனியா தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பொது சுகாதாரத்திற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மற்ற கொடிய நோய்களுடன் ஒப்பிடும் போது நிமோனியா மற்றும் வயிற்று போக்கினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். தாய்ப்பால் புகட்டுவது குழந்தைகளை இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாக்கிறது. இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்று போக்கினால் 5 வயதுக்கு உட்பட்ட இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 240 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.

 நாள் ஒன்றுக்கு 640 குழந்தைகள் இறக்கின்றனர்.
நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, 'நிமோகோக்கல் கான்ஜுகேட்' என்ற தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி வழங்கும் விகிதம் 2019-ல் இந்தியாவில் 15 சதவீதமாக இருந்தது. இது 2020-ம் ஆண்டில் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க ரோட்டா வைரஸ் தடுப்பூசி போடப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்று சவால் இருந்த நேரத்திலும், குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!