முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது : சுவீடன் அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஸ்டாக்ஹோம் : கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அதிரடி முடிவு சுவீடனில் எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் சுவீடன் நாட்டில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை வெகுவாகக் குறைந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது,  

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டால், அவர்கள் கொரோனாவுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது. சுவீடனில் சில பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை இலவசமாக செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகிறபோது சுவீடனில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை கடந்த வாரம் 35 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் பரிசோதனைக்கான வளங்களை வேறு இடங்களில் சிறப்பாக பயன்படுத்தலாம். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய்வாய்ப்படும் அபாயம் குறைவு, நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால் அவர்களைப் பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவீடன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகள் குளிர் காலத்தை எதிர்நோக்கி உள்ள இந்த நிலையில், சுவீடன் இப்படி ஒரு முடிவை எடுத்தது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து அங்கு பத்திரிகை ஒன்று, கொரோனா பரவல் மற்றும் நோய் பரவல் சங்கிலியை உடைக்கும் திறனில் சுவீடன் மீண்டும் இருளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து