முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்டோரியா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியது சர்வாதிகாரம், என்று விக்டோரியா மாகாண அரசுக்கு போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 

மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.   ஆஸ்திரேலியாவில் 83 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டும், சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!