முக்கிய செய்திகள்

வீடு தேடி கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
Ma Subramanian 2021 07 21

வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தை மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் பேசும்போது, “முதல்முறையாக புனேவிலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 53 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். கிராமப் பகுதிகளாலும் இருந்தாலும், நகரப் பகுதிகளாக இருந்தாலும், யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொள்ளவில்லையோ அவர்களை கண்டறிய வேண்டும் என்றும், இரண்டாம் தவணை போட்டுக் கொள்ளாத 70,0000 பேரை கண்டறிய வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக் கால தொற்றைத் தடுக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,15,632. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,56,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,69,848. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து