முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

85-வது நினைவு நாள்: சென்னையில் இன்று வ.உ.சி. சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வ.உ.சிதம்பரனாரின்  85-வது நினைவு நாளையொட்டி  இன்று இராஜாஜி சாலையில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். 

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமின்றி தனது சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து அன்னியரால் இரட்டை ஆயுள் தண்டனையையும் அனுபவித்து, சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டான இந்த ஆண்டில் அன்னாரின் 85-வது நினைவு நாளானது, தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 03.09.2021 அன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். 

அதனடிப்படையில், அன்னார் மறைந்த நாளான நவம்பர் 18 அன்று  காலை                   9.30 மணியளவில், சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.   

தாய்த் திருநாட்டின் விடுதலைக்குத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அன்னார் மறைந்த நாளான நவம்பர் 18-ம் நாளன்று சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.  மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அவர் வாழ்ந்த இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்திலும் அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து