முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையை எதிர்கொள்ள தொடர் கண்காணிப்பு: முக்கிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறப்பு

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

தயார் நிலையில் மீட்பு குழுவினர்: தமிழக அரசு தகவல்

சென்னை : கனமழையை எதிர்கொள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழகத்தில் 480.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 61 சதவிகிதம் கூடுதல் ஆகும்.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.71 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இது, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (19.11.2021) சென்னைக்கு அருகில் கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

முக்கிய நீர்த்தேக்கங்களான, செங்குன்றத்திலிருந்து 2156 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 700 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 2111 கன அடியும், பூண்டியிலிருந்து 7021 கன அடியும் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.  தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தலா 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு குழுவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 54 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜே.சி.பி.க்களும்,  793 இராட்சத பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. இதர மாவட்டங்களில், 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜே.சி.பி.க்கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. 

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரால் பயிற்சி அளிக்கப்பட்ட 3023 காவலர்கள் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்,  3685 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், 834 காவலர்கள் சென்னை மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 

 

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்த கனமழை முதல் அதிகனமழையினால் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்பட்டு, முதல் நிலை மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும், ஆக மொத்தம் ரூ.2629.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி, ஒன்றிய அரசுக்கு 17.11.2021 அன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து