முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களுக்கு கொரோனா தளர்வுகளை அறிவித்த சிங்கப்பூர்

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் பயணித்தால் இனி தனிமைப்படுத்தல் கிடையாது என சிங்கப்பூர் அரசு தளர்வுகளை அறிவித்திருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தொற்றின் தீவிரம் குறைந்து வருவதாலும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் சில நாடுகள் பயணிகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் சிங்கப்பூரில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என புதிய தளர்வை அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தளர்வு வருகிற 29-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து