முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஆஸ்திரேலியாவில் முழு ஊரடங்கு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவலையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. 

ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடாத மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் உள்ள வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். 

 

இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். இதே போல் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை தொடங்கும் என்று ஸ்லோவாகியா பிரதமர் எட்வர்ட் ஹெகர் அறிவித்தார். மேலும் செக் குடியரசு அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து