முக்கிய செய்திகள்

சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 20.11.2021 முதல் 8 நாட்களுக்கு விநாடிக்கு 50 க.அடி.வீதம், நீர் இருக்கும் வரை திறந்து விடவும், நீர் இருப்பைப் பொறுத்து நீர் இருக்கும் வரை தேவைக்கேற்ப 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 3130.68 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். 

 

மற்றொரு செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம்,  பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு  150 க.அடிவீதம்  20.11.2021 முதல் 5 நாட்களுக்கு மற்றும் பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 க.அடி வீதம்  20.11.2021 முதல் 28.02.2022 வரையிலும் தண்ணீர் திறந்து விடவும், மேலும் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு பொறுத்து அனைத்து கண்மாய் பாசனத்திற்கு தொடர்ந்து 28.02.2022 வரை தண்ணீர் திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் இத்திட்டத்தில் உள்ள 553.46 ஹெக்டேர் கண்மாய் பாசன நிலங்களும், பெரியாறு கால்வாய் மூலம் 249.47 ஹெக்டேர் நேரடி பாசன நிலங்களும் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து