முக்கிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      தமிழகம்
Ramadas--2021-09-10

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்த உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி இது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.  இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், 

'வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி.  இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து