முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநானக் ஜெயந்தி: சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குருபூரப் என்று அழைக்கப்படும் குருநானக் ஜெயந்தி சீக்கியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 552-வது பிறந்த தினமான குருநானக் ஜெயந்தியை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் நேற்று முன்தினம் கொண்டாடினர். 

இந்த நிலையில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீக்கியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு குருநானக் கூறிய சமத்துவம், அமைதி மற்றும் சேவை பற்றிய தொலைநோக்கு கருத்துகள் இன்றும் முக்கியமானவை.  குருநானக்கின் போதனைகள், அனைத்து மக்களின் ஒழுக்கம் மற்றும் சம உரிமைகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் சேவைச் செயல்கள் போன்றவற்றை வலியுறுத்துகின்றன. 

மேலும், குருநானக்கின் இந்த கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின்படி வாழ்வதன் மூலம் சீக்கியர்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறார்கள் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து