முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகாண்டாவில் பாதுகாப்பு படையினர் அதிரடி: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கம்பாலா : உகாண்டாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 16-ம் தேதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.  அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் நாட்டின் தலைமை காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 தற்கொலைப்படை தாக்குதலில் மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.   

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இறங்கினர்.  அதன்படி, அந்நாட்டின் லுவிரோ, லிவிசா, டுரோகோ, பிரிர்வி, பண்டிபுகு ஆகிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து