முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுப்பணி வழங்க வாசன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

ஆசிரியர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலில் திறமை மிக்க ஆசிரியர்களின் பணி அடிப்படையானது.  அந்த வகையில் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர்கள் அரசுப்பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள்.  கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். அதாவது 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப்பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிரியர்கள் அரசுப்பணி வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.  தமிழக அரசு, அரசுப்பணிக்காக போராடிய ஆசிரியர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.  2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக வின் தேர்தல் அறிக்கையில் 2013 -ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.  2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளித்து தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து