முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மணலியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவொற்றியூர் : சென்னை மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மணலியில் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 

மணலி புதுநகரில் உள்ள மணலி சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களை மாநகராட்சி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதியில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.  அப்போது, குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் தங்கி உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சென்னை மாநகர ஆணையர் சந்தீப் பேடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் உள்பட பலர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து