முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பாதிப்புகள் மேலும் அதிகரிப்பு: மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண நிதி கேட்போம் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மழை பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருவதால் மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண நிதி கேட்போம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து புதிதாக பாதிப்பு விவரங்கள் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது., தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை (இன்று) வருகிறது. நாளை (22-ம் தேதி) முதல் 2 நாட்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்து செல்லப்படுவார்கள். அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் சேதவிபரங்களை எடுத்து சொல்ல வேண்டும். மத்திய குழுவினர் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார்கள். ஏற்கனவே மத்திய அரசிடம் முதல் கட்டமாக 2,629 கோடி நிவாரண நிதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து புதிதாக பாதிப்பு விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண நிதி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து